இந்தியா செய்தி

கனடாவில் இருந்து அமெரிக்க செல்ல முற்பட்ட இந்திய குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்!

கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்ல முற்பட்ட இந்திய குடும்பம் ஒன்று குளிரில் உறைந்து உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருவருடத்திற்கு முன்பு அவர்கள் 11 பேர் கொண்ட புலம்பெயர் கும்பலுடன்சட்டவிரோதமாக எல்லையை கடக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் துரதிஷ்டவசமாக அவர்கள் குளிரில் உறைந்துபோய் உயிரிழந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

ஜகதீஷ் படேல், அவரது மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் கனேடிய எல்லையின் கிட்டத்தட்ட காலியான பகுதி வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோதமான கடத்தல் கும்பல்களால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகளால் பலர் உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி