இலங்கை செய்தி

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து – மூவர் பலி

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்தினால் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பேருந்து முல்லைதீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றுடன் பார ஊர்தி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த அதி சொகுசு பேருந்து திருத்த வேலை காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திருத்த பணியில் மூவர் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது பேருந்து மீது பார ஊர்தி மோதியதில் மூவர் உயிரிழந்துடன் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மூவரின் சடலங்களும் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் உள்ளன சம்பவம் தொடர்பில் மாங்குளம் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை