இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு

காஸாவை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள்

காஸாவின் வடக்குப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் வெளியேறியுள்ளனர்.

அங்கு நடக்கும் சண்டை முடிவுக்கு வரவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவின் உயர் ஆலோசகர் ஒருவர் சண்டைநிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள வெள்ளை மாளிகை செல்லவிருக்கிறார்.

காஸா விவகாரம் தீர்க்கப்படுவதோடு இஸ்ரேலியப் பிணையாளிகளும் விடுவிக்கப்படுவர் என்று தாம் நம்புவதாகத் திரு நெட்டன்யாஹு கூறினார்.

இஸ்ரேல் பிணையாளிகள் சுமார் 50 பேர் காஸாவில் இருப்பதாகவும், அதில் 20 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இணக்கம் காண முடியாததால் சண்டைநிறுத்தப் பேச்சுவார்த்தை அடிக்கடி நின்றுபோகிறது.

வார இறுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவில் 88 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.