உலகம் செய்தி

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து!! பலரை காணவில்லை என தகவல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் விபத்தை சந்தித்ததாகவும், ஹெலிகாப்டரில் இருந்த பலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஹெலிகாப்டர்கள் பயணித்ததாகவும், அதில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஈரான் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தின் போது ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா? அல்லது விபத்திற்கான காரணம் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி