இந்தியா

வகுப்பில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை…!

பள்ளியில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல், தன் முக அழகைப் பாதுகாக்க ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை ஒருவரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை எடுத்தவரை தலைமை ஆசிரியை தாக்கியதாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கு அனுப்பிய குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் ஒரு தலைமை ஆசிரியை, ஃபேஷியல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள பிகாபூர் தொகுதியின் தண்டமாவு கிராமத்தில் ஆரம்பப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக சங்கீதா சிங் உள்ளார். இவர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு உரிய முறையில் பாடம் கற்பிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாளாகவே உள்ளது. இந்த நிலையில் பள்ளியின் உணவு தயாரிக்கும் அறையில் தலைமை ஆசிரியை சங்கீதா சிங்கிற்கு நேற்று ஒருவர் ஃபேஷியல் செய்து கொண்டிருந்தார்.

இந்த காட்சியை உதவி ஆசிரியர் அனம் கான் வீடியோவாக எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா சிங், அனம் கானை துரத்தி துரத்தி அடித்து உதைத்துள்ளார். இந்த நிலையில், இந்த இரண்டு வீடியோக்களையும் அனம் கான் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

தாக்குதலுக்குள்ளான ஆசிரியை அனம் கான்

இதைக் கண்ட மாவட்ட கல்வி அதிகாரி, தண்டமாவு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியை சங்கீதா சிங் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், சங்கீதா சிங் தாக்கியதால், காயமடைந்த உதவி ஆசிரியர் அனம் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமை ஆசிரியை சங்கீதா சிங் மீது பிகாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் பொலிஸார், சங்கீதா சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பிகாபூர் வட்ட கல்வி அதிகாரி மாயா ராய் கூறுகையில், ” தண்டமாவு கிராமத்தை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியை பள்ளி வளாகத்தில் ஃபேஷியல் செய்ததாகவும், இதை வீடியோ எடுத்த ஆசிரியையை அடித்து உதைத்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே