இலங்கை செய்தி

திருகோணமலையில் நலம் விசாரிக்கச் சென்ற வயோதிபருக்கு நேர்ந்த கதி

திருகோணமலை- கோமரங்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பக்மீகம பகுதியில் நோயாளி ஒருவரை பார்வையிட சென்ற வயோதிபரொருவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

இவ்வாறு படுகாயம் அடைந்தவர் அதே பகுதியில் வசித்து வரும் 58 வயதான ரணசிங்க முதியன்சலாகே பத்மசிறி என தெரிய வருகின்றது.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது பல நாட்களாக இளைஞர் ஒருவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து குறித்த இளைஞரை நோய் விசாரிக்கச் சென்ற போது யானை தாக்கியதாகவும் இதனைஅடுத்து கோமரங்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கிராமத்தைச் சுற்றி யானை மின் வேலிகள் போடப்பட்டிருந்த போதிலும் சிறந்த முறையில் பராமரிக்கப்படாமையினால் யானை வேலிகள் உடைந்த நிலையில் காணப்படுவதாகவும் இதனாலேயே யானை கிராமத்துக்குள் உப்புகுந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை