இலங்கை

வரி செலுத்தாதவர்களின் சொத்து பறிமுதல் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கம்

பெரிய மற்றும் நடுத்தர வரி ஏய்ப்பாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வரி பாக்கியை செலுத்தத் தவறினால், சொத்து பறிமுதல் மற்றும் வங்கிக் கணக்கு முடக்கம் போன்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெரிய வரி செலுத்துவோர் மற்றும் நடுத்தர வணிகங்கள் என்பன, 2024 ஒக்டோபர் 25ஆம் திகதிக்குள் 100 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளன.

இந்த தொகையை செலுத்த வேண்டியவர்கள் டிசம்பர் 25ஆம் திகதி வரை நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் சேபாலிகா சந்திரசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தத் தொகையை மீட்டெடுத்தால், திணைக்களத்தின் இந்த ஆண்டின் வருமான இலக்கான 2024 பில்லியன் ரூபாய்களை அடையமுடியும் சந்திரசேகர கூறியுள்ளார்.

இந்த காலக்கெடுவை நீடிக்க முடியாது என்றும், கடனை செலுத்தத் தவறினால், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் மற்றும் அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்