செய்தி விளையாட்டு

நியூசிலாந்து அணிக்கு 107 ஓட்டங்கள் இலக்கு

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 2ம் நாளில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

பின்னர் 2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சர்பராஸ் கான் 150 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

99 ரன்களுக்கு அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் ரிஷப் பண்ட் இழந்தார். அடுத்து விளையாடிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க 462 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆல் அவுட்டானது.

107 ரன்கள் என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. நாளை நடைபெறும் இறுதிநாள் ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி இந்திய அணி போட்டியை வெல்லுமா என்று ராசிகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி