யுவதியின் சடலம் துஷ்பிரயோகம்: நீதி கோரி போராட்டம் முன்னெடுப்பு!
மலையக பெருந்தோட்டப் பகுதியில் உள்ள வைத்தியசாலையொன்றில் பிண அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள கொடூர சம்பவத்துக்கு நீதி கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும், இது தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டம், டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் பிண அறையிலேயே இக்கொடூரம் சம்பவம் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. டிக்கோயா பகுதியை சேர்ந்த 23 வயது யுவதியொருவரின் சடலம் […]













