இலங்கை

இலங்கையில் முக்கிய துறைகள் ஆபத்தில் – எச்சரிக்கும் மத்திய வங்கியின் முன்னாள் துணை ஆளுநர்

இலங்கை பொருட்களுக்கான வரி விகிதத்தை அமெரிக்கா 12 சதவீத்திலிருந்து 44 சதவீதமாக அதிகரித்த பிறகு, இலங்கைப் பொருட்கள் இனி அமெரிக்க சந்தையில் போட்டியிட முடியாது என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் டபிள்யூ. ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், சுமார் 2,000 மில்லியன் டொலர் மதிப்புள்ள இலங்கையின் ஆடைப் பொருட்களும், சுமார் 500 மில்லியன் டொலர் மதிப்புள்ள றப்பர் பொருட்களும் இனி அமெரிக்க சந்தையில் போட்டியிட முடியாது என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

யூடியூப் சேனல் ஒன்றுடனான கலந்துரையாடலில் டபிள்யூ. ஏ. விஜேவர்தனே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது அமெரிக்காவிற்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள் மற்றும் ரப்பர் உள்ளிட்ட இலங்கையின் உற்பத்தித் தொழில்களுக்கு பெரும் அடியாக இருக்கும். அந்தத் தொழில்களைப் பாதுகாக்க அரசாங்கம் சிறப்புச் சலுகைகளை வழங்க வேண்டியிருக்கும்.

மனித உழைப்புக்குப் பதிலாக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆடைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தனது சொந்த நாட்டிலேயே தொடங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்