இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: கட்டுப்பணம் செலுத்திய 36 வேட்பாளர்கள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொத்தம் 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 19 வேட்பாளர்களும், மற்றொரு அரசியல் கட்சியின் வேட்பாளர் ஒருவரும், அந்தந்த பிரதிநிதிகளால் பரிந்துரைக்கப்பட்ட 16 சுயேச்சை வேட்பாளர்களும் அடங்குவர்.

இன்று கையளிக்கப்பட்ட வேட்புமனுக்களில் சமபிம கட்சியைச் சேர்ந்த நாமல் ராஜபக்ஷ என்ற மற்றொரு வேட்பாளரும் உள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை தனது கட்டுப்பணத்தை செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான காலம் நாளை (14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நாளை மறுதினம் (15) காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை ஆரம்பமாகவுள்ளது.

வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் தினத்தன்று இராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்