இலங்கை

இலங்கை – மட்டக்ளப்பில் நீரோடையில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

பெற்றோரின் கவனயீனம் காரணமாக நீர்நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் இன்று (04) பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத்திட்டத்தில் இன்று (04) காலை நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையான முருகேசு விகான் என்னும் குழந்தையே உயிரிழந்துள்ளது.

குறித்த நீர்நிலைக்கு அருகில் உள்ள வீட்டிலிருந்து குழந்தை தத்திநடந்துவந்து நீரோடைக்குள் விளையாடிக்கொண்டிருந்தபோது நீருக்குள் வீழ்ந்துள்ளது.

வாய்க்கால் நிரோடையில் விழுந்த குழந்தையினை பழுகாமம் பிரதேசவைத்திய சாலைக்கு கொன்று சென்ற போதும் குழந்தை வைத்திய சாலைக்கு வருமுன் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக குழந்தை களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு கொன்டுசெல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

பெற்றோரின் கவனயீனம் பிள்ளைகள் மீதான அக்கரையற்ற செயற்பாடுகளே இவ்வாறான சம்பவம் ஏற்படுவதற்கான காரணம் என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்