இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை : நாமல் ராஜபக்ஷவின் கல்வி தகமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சட்டம் தொடர்பான தனது உயர்நிலை கல்வித் தகைமையை மோசடியான முறையில் பெற்றுக்கொண்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலஞ்சம், ஊழல் தொடல்பான அதிகார சபையின் தலைவர் ஜமுனி கமந்த துஷாரவினால் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டில்  பரீட்சை தினத்தின்று நாமல் ராஜபக்ச மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக அன்றையதினம் அவருடன் பரீட்சைக்கு தோற்றிய இளைஞர் ஒருவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞர் அன்றைய தினம் பரீட்சை கடமையில் இருந்த மண்டபத் தலைவர், சட்டக்கல்லூரி அதிபர், பதிவாளர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தால் தான் நீதியமைச்சின் அப்போதைய செயலாளர் சுஹத கம்லத்திடம் சென்றதாகவும், ஆனால் அவர் இந்த முறைப்பாட்டைக் கவனத்தில் கொள்ள மறுத்ததாகவும் தெரிய வருகிறது.

அதன் பின்னர் அப்போதைய வாழைத்தோட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி போன்ற அனைத்து திணைக்களங்களுக்கும் சென்று முறைப்பாடு செய்துள்ளார். இதன்பின்னர் குறித்த இளைஞன் தமது பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனால் சாட்சியங்களை பெற்று முறையான விசாரணைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்