ஆசியா

உறவுகளை வலுப்படுத்த தென் கொரிய அதிபர் லீ, ஜப்பான் பிரதமர் இஷிபா ஆகியோர் ஒப்புதல்

தென்கொரியாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் லீ ஜே மியூங், ஜப்பானியப் பிரதமர் ஷிகெரூ இஷிபாவுடன் தொலைபேசி அழைப்பில் இணைந்து இருநாட்டு உறவுகளைப் புதுப்பிக்க ஒப்புக்கொண்டதாகத் தென்கொரிய அதிபருக்கான பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வடகொரியா தொடர்பான விவகாரங்கள் குறித்து இணைந்து செயல்படப் போவதாக அந்த இரண்டு தலைவர்களும் குறிக்கோள் கொண்டுள்ளதை அடுத்து இந்தத் தொலைபேசி அழைப்பு நிகழ்ந்தது. அந்த அழைப்பு கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் நீடித்தது.

அரசியல் கொள்கையில் இடசாரி சாயல் கொண்டுள்ள திரு லீ, கடந்த வாரம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நடைமுறைவாத கொள்கையைக் கொண்டுள்ளதாகக் கருதப்படும் திரு லீ, பாதுகாப்பு ஒத்துழைப்பை தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் தொடரப்போவதாக தென்கொரிய அதிபர்ப் பேச்சாளரான காங் யூ ஜுங் தெரிவித்தார்.

ஜப்பானுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான இருநாட்டு உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய காங், அவ்விரு நாட்டுத் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்துத் தங்கள் உறவை மேம்படுத்த இசைந்ததாகவும் கூறினார்.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்