மத்திய கிழக்கு

தென்னாபிரிக்கா- அடுக்குமாடி கட்டிட தீ விபத்து: பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு!

தென்ஆப்பிரிக்காவின் முக்கிய வணிக மாவட்டமாக கருதப்படுவது ஜோகன்னஸ்பர்க். தென்ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான இங்குள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நள்ளிரவு 1.30 மணிக்கு தீயணைப்புத்துறையினருக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இன்று காலையில் தான் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் ஆனாலும் கட்டடத்திலிருந்து புகை வெளியேறி கொண்டிருந்தன. இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தீ விபத்து நேரிட்ட கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி உடனடியாக துவங்கப்பட்டாலும் 64 பேரின் உடல்கள் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது. 43 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. இதுவரை கட்டடத்தில் இருந்து 73 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. தீ விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content