இலங்கை

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடம்: கட்சி எடுத்துள்ள தீர்மானம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக வைக்க கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனது புதிய அலுவலகப் பொறுப்பாளர்களை இன்று நியமித்துள்ளது.

தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடிய கட்சியின் செயற்குழு இந்த தீர்மானங்களை எடுத்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மீண்டும் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கட்சியின் புதிய பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவராக வண. உத்துராவல தம்மரதன தேரர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்