இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கை சந்தையில் கிடைக்கும் சரும பூச்சுகளால் ஆபத்து – மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை சந்தையில் கிடைக்கும் பல முக மற்றும் சரும பூச்சுகளில் ஆபத்தை விளைவிக்கும் அதிகளவு கன உலோகங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுகூட பரிசோதனைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தயாரிப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட வரம்புகளை மீறி, நுகர்வோருக்குக் கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும் வகையில் கன உலோகங்கள் உள்ளடங்கியுள்ளதாக, அந்த சபை தெரிவித்துள்ளது.

குறித்த தயாரிப்புகளின் பெயர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட உலோக செறிவுகளைக் காட்டும் அறிக்கையொன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளை மீறும் முகப் பூச்சுகள் மற்றும் சரும பூச்சுகளை வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என, பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தயாரிப்புகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் இது தொடர்பில் கடுமையான சட்ட அமுலாக்கம் பின்பற்றப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை