இலங்கை செய்தி

சஜித் ஜனாதிபதியானால் ஒரு வருடத்திலி ஓடிவிடுவார் – சரத் பொன்சேகா

சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால், ஒரு வருடத்திற்குள் பதவியை விட்டுவிட்டு ஓடிவிடுவார் என சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவும் தாம் முன்னர் கூறியது போன்று இரண்டு வருடங்களின் பின்னர் ஓடிவிட்டார் என அவர் கூறுகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் பொன்சேகாவின் வெற்றிக்காக கம்பஹாவில் நடைபெற்ற முதலாவது பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

‘அன்று, கட்சி சார்பற்ற தலைவர் தேவை என்று காலிமுகத்திடல்  மைதானத்தில் போராட்டம் நடந்தது.

இப்போது நான் அவர்களை என்னுடன் சேர அழைக்கிறேன். கட்சி அரசியலில் இருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன்.

எனவே, கட்சி சார்பற்ற ஒரு தலைவரை நாட்டுக்கு நியமிப்பதற்கான வாய்ப்பு இப்போது மக்களுக்கு கிடைத்துள்ளது.

அதேபோன்று சஜித் பிரேமதாச இந்த நாட்டின் ஜனாதிபதியானால் ஒரு வருடத்தில் ஓடிவிடுவார்.

நான் சொன்னது நிச்சயம் நடக்கும் என்று நீங்கள் அனைவரும் பொன் எழுத்துக்களில் எழுதுங்கள்.

நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை உள்ளது அதைத் தீர்க்கக்கூடிய அறிஞர்கள், புத்திஜீவிகள் இருந்தாலும் அவர்களை வழிநடத்தும் நல்ல தலைமை இல்லை.

இந்நாட்டின் வருமானத்தைப் பெருக்கி மக்களின் கைகளை வளப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அவற்றைச் செய்வதற்கு எங்களிடம் பணி உத்தரவு உள்ளது. அதனால்தான் என்னுடன் சேர மக்களை அழைக்கிறேன்.’ என்றார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை