ஐரோப்பா

போர்க் கைதிகளின் உடல்களை ரஷ்யா ஒப்படைக்கவில்லை: உக்ரைன் குற்றச்சாட்டு

பெல்கோரோட் பகுதியில் இராணுவ விமான விபத்தில் இறந்ததாக மாஸ்கோ கூறுகின்ற உக்ரேனிய போர்க் கைதிகளின் உடல்களைத் திருப்பித் தர ரஷ்யா விருப்பம் காட்டவில்லை என்று உக்ரேனிய இராணுவ உளவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

65 உக்ரேனிய வீரர்கள் ரஷ்ய இராணுவ விமானத்தில் உயிரிழந்துள்ளனர்.

இது கடந்த புதன் கிழமை ரஷ்யாவின் பெல்கோரோடில் எல்லைக்கு அருகில் விழுந்து நொறுங்கியதாக மாஸ்கோ கூறுவதை ஆதரிக்க எந்த ஆதாரத்தையும் மாஸ்கோ வழங்கவில்லை என்று கிய்வ் கூறியுள்ளது.

இந்நிலையில் மாஸ்கோ, விமானம் உக்ரைனால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று தெரிவித்துள்ளது. இதற்கு உக்ரைன் தனது படைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்