விளையாட்டு

வெற்றியை கொண்டாட ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த ரோகித் சர்மா

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதன் மூலம் இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.

இந்நிலையில் உலகக் கோப்பையுடன் நாளை தாயகம் திரும்பும் இந்திய அணி வீரர்களை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

இதனை தொடர்ந்து நாளை மாலை மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்கள் பேரணியாக, ரசிகர்கள் படை சூழ திறந்த வெளி பஸ்ஸில் டி20 உலகக்கோப்பையுடன் பயணிப்பார்கள் என்றும், தொடர்ந்து மைதானத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ரோகித் சர்மா இது பற்றி தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, இந்த ஸ்பெஷல் தருணத்தை உங்களுடன் கொண்டாட நாங்கள் விரும்புகிறோம்.

எனவே அனைவரும் இந்த வெற்றியை ஜூலை 4ம் தேதி மாலை 5 மணிக்கு கடற்கரை சாலை மற்றும் வான்கடே மைதானத்தில் கொண்டாடத் தயாராக இருங்கள். கோப்பை வீட்டுக்கு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ