ஐரோப்பா

உக்ரைனுக்கான கூடுதல் இராணுவ ஆதரவை அறிவிக்க தீர்மானம் – இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

உக்ரைனுக்கு கூடுதல் இராணுவ ஆதரவு இன்று (11.04) அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அதன் நட்பு நாடுகள் “ஆதரவை அதிகரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி வருகின்ற நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.

கூடுதல் ஆதரவு பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோவின் தலைமையகத்தில் நடைபெறும் உக்ரைன் பாதுகாப்பு தொடர்பு குழுவின் 27வது கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று  பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி கூறினார்.

ஜனாதிபதி புடினின் போரை முடிவுக்குக் கொண்டுவர நாம் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும், மேலும் சண்டையிலும் அமைதிக்கான முயற்சியிலும் உக்ரைனுக்கு ஆதரவை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்