இலங்கை

செயற்கை நுண்ணறிவு திட்டத்திற்காக பில்லியன் ரூபாய்களை ஒதுக்கும் ரணில் அரசாங்கம்!

செயற்கை நுண்ணறிவிற்காக அடுத்த வருடம் பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடுசெய்வதாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் வர்த்தகர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

பில்லியன் ரூபாய் என்பது மிகச்சிறிய தொகை என தெரிவித்துள்ள ஜனாதிபதி அடுத்தவருடமாவது அதனை செலவிடுவதை உறுதி செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உங்களிற்கு இது முற்றிலும் புதிய எதிர்காலம் நாங்கள் இதனை உள்வாங்க தயாராக இருக்கின்றோமா எனவும் கேள்வி எழுப்பியுள்ள அவர் முற்றிலும்  புதிய கல்வி திட்டம் உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வருடாந்தம் பத்தாயிரம் பொறியியலாளர்களை உருவாக்கும் கல்விமுறை குறித்து தான் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 5000 மருத்துவர்களை உருவாக்குவது குறித்தும் ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்