இலங்கை செய்தி

‘சிறைச்சாலை கலவரம்’- நீதி அமைச்சருக்கு வலுக்கிறது நெருக்கடி

'சிறைச்சாலை கலவரம்'- நீதி அமைச்சருக்கு வலுக்கிறது நெருக்கடி

“ சர்வதேச சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து. நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும்.” என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு

“சிறைச்சாலை சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக நீதி அமைச்சர் கூறியுள்ளார். அப்படியானால் அவர் பதவி விலக வேண்டும். இதுதான் சர்வதேச சம்பிரதாயமாகும். அவ்வாறு செய்யாமல் பொறுப்பை ஏற்பதாகக் கூறுவது ஏற்புடைய விடயம் அல்ல.

இந்தியாவில் ரயில் விபத்து ஏற்பட்டதையடுத்து, துறைசார் அமைச்சர் பதவி விலகினார்.

விபத்துக்கு அவர் காரணம் இல்லை என்றபோதிலும், பொதுநலவாய சம்பிரதாயத்துக்கு மதிப்பளித்து அவர் பதவி விலகினார்.

இதே வழியில் எமது நாட்ட நீதி அமைச்சரும் பின்பற்ற வேண்டும்.” – என்றார் ஜி.எல்.பீரிஸ்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை