இலங்கை செய்தி

ஜனாதிபதி தேர்தல் – கருத்துக்கணிப்பில் சஜித் முன்னிலை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு அறிக்கைகளின்படி சஜித் பிரேமதாச 48 வீதத்தைப் பெற்றுள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

அனுர திஸாநாயக்க 28% மற்றும் திரு ரணில் விக்கிரமசிங்க 18% வாக்குகளை இதுவரை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு எஞ்சிய மூன்று வீதத்தை சஜித் பிரேமதாச இலகுவில் பூர்த்தி செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை