இந்தியா

கடையில் பொருத்தப்பட்டிருந்த பல்பைத் திருடி பேன்ட் பாக்கெட்டில் போட்ட பொலிஸ்காரர்…!

உத்தரப்பிரதேசத்தில் சீருடை அணிந்த பொலிஸ்காரர் ஒருவர், கடையில் எரிந்து கொண்டிருந்த பல்ப்பை திருடும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் சிக்கந்தபூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு பொலிஸ்காரர் ஒருவர் தான், இப்போது இந்தியா முழுவதும் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளார்.

ஒரு கடையின் வெளியே எரிந்து கொண்டிருந்த பல்ப் ஒன்றை சீருடை அணிந்த பொலிஸ்காரர், வேகமாக ஏறி திருடி தனது பேன்ட் பாக்கெட்டில் வைக்கிறார். அத்துடன் எதுவும் நடக்காதது போல செல்போனில் பேசிக் கொண்டு போகிறார்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. இந்த திருட்டுச் சம்பவம் ஏப்ரல் 20ம் திகதி நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ வெளியானதைக் கண்டு பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே