இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதிய பேருந்து சேவை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை பிரதான புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையம் வரையான புதிய சொகுசு பேருந்து சேவை இன்று (15) ஆரம்பமானது.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், நாட்டிற்குள் பயணிக்க போக்குவரத்து சேவை ஏஜென்சியின் வசதிகளைப் பெறவில்லை என்றால், அவர்கள் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவரிவத்த பேருந்து நிலையத்திற்கு வர வேண்டும்.

இதன்படி, விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த பேருந்துகள் இடையில் நிற்காமல் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வழியாக செல்லும்.

இந்த புதிய பேருந்து சேவையானது, விமான நிலையம், ஏவியேஷன் கம்பெனி லிமிடெட், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் ஒரு தனியார் பேருந்து நிறுவனம் ஆகியன இணைந்து நடாத்துகின்றன.

இந்த சேவைக்காக 10 சொகுசு பெரிய பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒரு பயணியிடம் இருந்து 3,000 ரூபாய் வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை