இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

மைத்திரியின் மகனுக்கு குறி வைக்கும் நாமல் – விடுக்கப்பட்ட அழைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தன்னுடன் இணைந்து பணியாற்ற தஹாம் சிறிசேனவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தஹாம் சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகனாகும்.

கடந்த தேர்தல்களில், தஹாம் சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து பணியாற்ற அழைக்கப்பட்டார். ஆனால் எந்த சாதகமான பதில்கள் கிடைக்கவில்லை.

புதிய திட்டம் குறித்து தஹாம் சிறிசேன இன்னும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

மேலும் எதிர்காலத்தில் அவர் இது குறித்து ஒரு முடிவை எடுப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில் பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்வில் நாமலும் தஹாமும் இணைந்து இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்த நிகழ்வும் அரசியல் தலைவர்கள் பலரது கவனத்தை ஈர்த்தது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்