வட அமெரிக்கா

அமெரிக்காவில் தர்பூசணிக்குள் சிக்கிய மர்மம் – குழப்பத்தில் அதிகாரிகள்

அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் தர்பூசணிப் பழங்களுக்குள் போதைப்பொருள் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தர்பூசணிப் பழங்களு இருந்த கனரக வாகனத்தில் methamphetamine போதைப்பொருள் மறைத்துக்கொண்டு செல்லப்பட்டதை அமெரிக்க எல்லை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 5 மில்லியன் டொலருக்கும் அதிகமெனத் தெரிவிக்கப்பட்டது.

2 வகையான பச்சை வண்ணம் பூசப்பட்ட பைகளில் போதைப்பொருள்கள் மடிக்கப்பட்டிருந்தன. உண்மையான தர்பூசணிப் பழத்தைப்போல் பொட்டலம் தெரிய அந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவை உண்மையான தர்பூசணிப் பழங்களுக்கு மத்தியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. 2 டன்னுக்கும் அதிகமான போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

எல்லைகளைக் கடக்கும்போது காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றுக்கிடையே போதைப்பொருளை மறைத்துக் கடத்துவது வழக்கமான ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!