இலங்கை

மன்னாரில் பரவும் மர்ம காய்ச்சல் – 25 இராணுவ வீரர்கள் பாதிப்பு

மன்னார், விடத்தல்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் சுமார் 25 இராணுவ வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு காய்ச்சல் பரவியதையடுத்து, அங்குள்ள இராணுவ வீரர்களை குறித்த முகாமிலேயே தனிமைப்படுத்தியுள்ளதாக இராணும் தெரிவித்துள்ளது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் குழுவொன்றை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முகாமில் உள்ள மேலும் 500 இராணுவத்தினரை தனிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி முதல் இராணுவ வீரர்களுக்கு காய்ச்சல் பரவி வருவதாக தெரியவந்துள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்