இலங்கை செய்தி

முகேஷ் அம்பானியுடன் கைகோர்க்கும் முத்தையா முரளிதரன்

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பெவரேஜ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் மாபெரும் திட்டமொன்றுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் குளிர்பான சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் புதிய குளிர்பான நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறியப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, முரளிதரனின் சிலோன் பெவரேஜ் இன்டர்நேஷனல் நிறுவனம், கேம்பா கோலாவுக்கான டின் பொதிகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

அந்த பேக்கேஜிங்கிற்காக சிலோன் பெவரேஜ்ஸ் எதிர்காலத்தில் இந்தியாவில் பேக்கேஜிங் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் Cylon Beverages Sri Lanka தொழிற்சாலை நிறுவப்படும் வரை டின்னில் அடைக்கப்பட்ட Campa Cola ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

எவ்வாறாயினும், இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் எதிர்காலத்தில் குளிர்பான சந்தையில் போட்டி நிறுவனமாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!