ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலையில் பாரிய தீ விபத்து – வெளியேற்றப்பட்ட மக்கள்

இங்கிலாந்தின் ஸ்டாஃபோர்ட்ஷையர் (Staffordshire) பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் , அருகிலுள்ள பல வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் .

லீக் (Leek) நகரின் மில் வீதி (Mill Street) பகுதியில் அமைந்துள்ள ‘தி பிக் மில்’ (The Big Mill) கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை இரவு தீ ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு ஆறு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தீ பரவியதையடுத்து, அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதுடன், ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி, தீ பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் முழுமையாக தீ கட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து பணியில்
ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக 100 க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகள் பெறப்பட்டுள்ளன.

மேலும், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி