இலங்கை

இன்று பாராளுமன்றில் விசேட உரையாற்றிய மகிந்த

பொருளாதாரம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,“கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இந்த சபையில் பொருளாதாரம் தொடர்பான பல குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கின்றோம். தற்போது ஒவ்வொருவருடைய உரிமைகளையும் பறிப்பதற்கு பேசுபவர்கள் அந்தக் காலத்தில் என்ன செய்தார்கள் என்பது எங்களுக்கு நினைவிருக்கிறது.

எனினும், குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பதாக சேற்றின் மீது கை வைக்க தேவையா?அதனால், சேறு பூசுபவர்கள் கைகளில் சேறு உள்ளதை கூற விரும்புகிறேன்.

ஒருவருடைய உரிமையை அழிக்கப் பேசுபவர்கள் குறைந்தபட்சம் நாட்டு மக்களின் உரிமைகளையாவது உறுதி செய்ய செயற்பட்டிருக்க வேண்டும்

வரலாறு நெடுகிலும் மக்களின் வாழ்வுரிமையைப் பெற்றுத் தந்ததன் மூலம் எமது கடமையை நிறைவேற்றியுள்ளோம்.எனவே, ஒழிக்க வேண்டும் என்று பேசுபவர்கள், ஒரு உரிமையைப் பாதுகாப்பது எவ்வளவு கடினம் என்பதை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்