இந்தியா

மகாராஷ்டிரா- வெடிமருந்து ஆலையில் வெடிவிபத்து… 9 பேர் உடல் சிதறி பலி!

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள வெடி மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

நாக்பூர் அருகே பசார்கான் கிராமத்தில் உள்ள சோலார் காஸ்ட் பூஸ்டர் ஆலையில் இன்று காலை பேக்கிங் செய்யும்போது திடீரென தீப்பற்றி அதன் மூலம் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கு சென்ற நாக்பூர் (கிராமப்புற) காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் போதார் தலைமையிலான பொலிஸாரும், உள்ளூர் தீயணைப்பு படையினரும் தீயை அணைக்கும் முயற்சிகளிலும் உள்ளிருந்த பணியாளர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மொத்தம் எத்தனை பேர் அங்கு பணியில் இருந்தார்கள் அவர்களில் எத்தனை பேர் வெளியேறினார்கள் என்கிற விவரம் இதுவரை தெரியவில்லை. மற்ற தொழிலாளர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே