இலங்கை

இலங்கை : மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

2022 மற்றும் 2024 க்கு இடையில் மின்சாரக் கட்டணங்கள் தாமதமாக செலுத்தப்பட்டதன் காரணமாக கிட்டத்தட்ட 30 மில்லியன் சிவப்பு பில்கள் வழங்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

உரிய நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்தாததால் 1.3 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோரின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

126,000 க்கும் மேற்பட்ட நுகர்வோரின் கணக்குகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், கிட்டத்தட்ட 1.9 மில்லியன் புதிய மின் இணைப்புகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது 7.2 மில்லியனுக்கும் அதிகமான மின்சார பாவனையாளர்கள் இருப்பதாக அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்கவினால் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்