கஜகஸ்தான் – மனைவியை அடித்தே கொலை செய்த முன்னாள் அமைச்சர் ; நீதிமன்றில் ஒளிபரப்பான ஆதார வீடியோ!
கஜகஸ்தானில் முன்னாள் அமைச்சர், தனது மனைவியை உணவகத்தில் வைத்து 8 மணி நேரமாக தாக்தி கொலை செய்த CCTV காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஜகஸ்தானின் முன்னாள் பொருளாதார அமைச்சராக இருந்தவர் குவாண்டிக் பிஷிம்பாயேவ்(44). கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அல்மாட்டியில் உள்ள உணவகத்தில் இவரது மனைவி சுல்தானட் நுகெனனோவா(31) மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்குத் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஒருவாரமாக , தனக்கு இந்த மரணம் குறித்து எதுவும் தெரியாது என்று முன்னாள் அமைச்சர் பிஷிம்பாயேவ் பொலிஸாரிடம் கூறினார். அந்த உணவகத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பொலிஸாருக்கு ஒத்துழைக்காததால், அவருக்கு எதிராக ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால், தனது மனைவியை அடித்துக் கொலை செய்ததை குவாண்டிக் பிஷிம்பாயேவ் பின்பு ஒத்துக் கொண்டார். 





