ஐரோப்பா

பிரித்தானியாவில் வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளது… இளைஞர்கள் தீவிரம் காட்ட வேண்டும் ; அமைச்சர் ஜெர்மி ஹன்ட்

பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு குவிந்துள்ளதாக குறிப்பிட்டு, வேலையில்லாதோர் தங்கள் முயற்சியை இன்னும் சிறிது அதிகரிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெர்மி ஹன்ட் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகள் கோவிட் மற்றும் உக்ரைன் போரினால் மறுக்க முடியாத அளவுக்கு கடினமாக இருந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஜெர்மி ஹன்ட் மற்றும் வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் மெல் ஸ்ட்ரைட்,தற்போது நாடு முழுவதும் 900,000 வேலை வாய்ப்புகள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும், இளைஞர்கள் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, வேலை வாய்ப்பு தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து உதவி பெறுவோர் குறித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ள நிலையிலேயே அமைச்சர் தரப்பில் வேலை வாய்ப்பு எண்ணிக்கை வெளியானதாகவும் கூறப்படுகிறது.

Lincolnshire LMC | NHS Jobs: Displaying your listings

கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் காலியிடங்கள் பெரும்பாலும் நிரப்பப்படாமலே உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாதோருக்கான உதவிகள் என்பது தற்கால பாதுகாப்பு மட்டுமே என குறிப்பிட்டுள்ள அமைச்சர், அது நிரந்தரமல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் 900,000 வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதாகவும், வேலை வேண்டும் என்பவர்களுக்கு இது அரிய வாய்ப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், கடந்த 10 மாதங்களில் ஊதிய உயர்வும் ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீண்ட காலமாக நோயாளிகள் என குறிப்பிட்டு, வேலைக்கு செல்லாதோர் எண்ணிக்கை 2.8 மில்லியன் என்றும், மக்கள் பலர் தங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் போராடி வருவதாகவும், உளவியல் பாதிப்புகளால் வேலை இடத்தில் இருந்து வெளியேறும் சூழலும் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்