மத்திய கிழக்கு

விடைபெறும் போது ஹமாஸ் படையினருக்கு அன்பு முத்தம் கொடுத்த இஸ்ரேலிய பிணைக் கைதி

பிணைக் கைதி ஒருவர் ஹமாஸ் படையினறின் நெற்றியில் அன்பு முத்தம் கொடுத்து விடைபெற்ற சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி மேலும் 3 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாத படையினர் விடுவித்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்து வருகின்றனர். பதிலுக்கு நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வருகிறது.

அண்மையில் அப்படி 3 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவித்தனர். அதில் ஒமர் ஷெம் டோவ் என்ற பிணைக் கைதி, ஹமாஸ் படையை சேர்ந்த இரண்டு பேரின் நெற்றி பகுதியில் முத்தம் கொடுத்து விடைபெற்றார்.

விடுவிக்கப்பட்ட மூவருக்கும் சான்று அளிக்கப்பட்டது. அவர்கள் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் மூவரும் 505 நாட்கள் ஹமாஸ் பிடியில் இருந்துள்ளனர்.

ஒமர் மிகவும் மெலிந்து போயுள்ளார். ஆனால், உற்சாகமாக காணப்படுகிறார். பாசிட்டிவ் மனநிலையை அவர் கொண்டுள்ளார் என அவரது தந்தை கூறியுள்ளார்.

‘அதுதான் என் மகன் ஒமர். அவன் அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவான். அதானல் ஹமாஸின் அன்பையும் பெற்றுள்ளான்’ என அவரது தாயார் கூறியுள்ளார்.

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.