மத்திய கிழக்கு

போர் முடிந்த பிறகு காசாவின் பாதுகாப்பிற்கு இஸ்ரேல் பொறுப்பு : நெதன்யாகு

போர் முடிந்த பிறகு காசாவின் பாதுகாப்பை இஸ்ரேல் ராணுவம் கையாளும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “போருக்கு பிறகு காசா பகுதியில் பாதுகாப்பை இஸ்ரேல் மட்டுமே கையாள முடியும்.

காசாவில் ராணுவமற்ற மண்டலத்தை உருவாக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்கும். இதை செய்யக்கூடிய ஒரே சக்தி இஸ்ரேல்தான். காசா பகுதியின் ராணுவ மயமாக்கலுக்கான எந்தவொரு சர்வதேச சக்தியையும் அல்லது முயற்சியையும் நான் நம்பவில்லை.

ஹமாசின் ராணுவ மற்றும் அரசியல் திறன்களை முற்றிலுமாக அகற்றி இஸ்ரேலுக்கு எதிர்காலத்தில் காசா பகுதியில் இருந்து எந்த அச்சுறுத்தலும் வராதுய என்பதை உறுதிப்படுத்துவோம். தற்போது காசாவில் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் அனைவரையும் மீட்போம்” எனக் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.