இந்தியா செய்தி

ஈரான் போர்க்கப்பல் மூழ்கடிப்பு: இந்திய கடற்படை கூறுவது என்ன?

ஈரான் போர்க்கப்பல் Iranian warship மூழ்கிவிட்டது என தகவல் கிடைத்த கையோடு இந்திய கடற்படையும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட சென்றது என அந்நாட்டு கடற்படை Indian Navy அறிவித்துள்ளது.

இந்து சமுத்திரத்தில் இலங்கையின் தெற்கு கடற் பரப்புக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் ஈரான் போர்க்கப்பலை நீர்மூழ்கி கப்பல் தாக்குதல்மூலம் அமெரிக்கா மூழ்கடித்தது.

கூட்டு கடற்படை பயிற்சியை முடித்துக்கொண்டு இந்தியாவில் இருந்து திரும்பும்வழியிலேயே மேற்படி கப்பல் தாக்குதலுக்கு இலக்கானது.

இது தொடர்பில் இந்தியாமீதும் விமர்சன கோணத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவந்தன.

இந்நிலையில் இந்திய கடற்படை நேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டது.

“ கடந்த 4 ஆம் திகதி அதிகாலை ஈரான் போர்க் கப்பல் ஐஆர்ஐஎஸ் டேனாவில் இருந்து அவசர உதவி கோரி கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது.

இலங்கையின் காலி பகுதியில் இருநது 20 கடல் மைல் தொலைவில் ஈரான் போர்க்கப்பல் கடலில் மூழ்கியது. இது இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதி ஆகும்.

இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக மீட்புப் பணியில் களமிறங்கினோம். ஐஎன்எஸ் தரங்கிணி கப்பல் சம்பவ பகுதிக்கு அனுப்பப்பட்டது. “ எனவும் மேற்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொச்சியில் இருந்து ஐஎன்எஸ் இக்சாக் கப்பலும் சம்பவ பகுதிக்கு சென்றது.

இலங்கை கடற்படையோடு இணைந்து இந்திய கடற்படையும் மீட்புப் பணியில் ஈடுபட்டது.

இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானம் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று உயிர் காக்கும் ஜாக்கெட்டுகளை வீசியது. “ எனவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!