செய்தி விளையாட்டு

IPL Qualifier 2 – 203 ஓட்டங்கள் குவித்த மும்பை அணி

ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் இன்று நடைபெறும் குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.

அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 8 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் அதிரடியாக ஆடினர்.

பேர்ஸ்டோவ் 24 பந்தில் 38 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 29 பந்தில் 44 ரன்னும், திலக் வர்மா 26 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.

ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் நமன் தீர் 18 பந்தில் 37 ரன் எடுத்து அவுட்டானார்.

இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி