செய்தி விளையாட்டு

IPL Qualifier 1 – 101 ஓட்டங்களுக்கு சுருண்ட பஞ்சாப் அணி

ஐபிஎல் தொடரின் இன்றைய குவாலிபையர்-1 சுற்றில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே பஞ்சாப் அணி தடுமாறியது. இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

ஆர்யா 7, பிரப்சிம்ரன் சிங் 18, இங்லிஸ் 4, ஷ்ரேயாஸ் 2, நேகல் வதேரா 8, ஷசாங் சிங் 3 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

இதனால் பஞ்சாப் அணி 60 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. இதனால் பஞ்சாப் அணி இம்பேக்ட பிளேயராக சர்ப்ராஸ்கான் சகோதரரான முஷீர் கானை களமிறக்கியது. ஆனாலும் அவரும் டக் அவுட்டில் வெளியேறினார்.

அதன்பின் பஞ்சாப் அணியால் சரிவில் இருந்து மீளமுடியவில்லை. இதனால் 14.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 101 ரன்னில் சுருண்டது.

ஆர்சிபி அணி தரப்பில் ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். யாஷ் தயாள் 2 விக்கெட் வீழ்த்தினார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி