செய்தி விளையாட்டு

IPL Match 50 – 201 ஓட்டங்கள் குவித்த ஐதராபாத் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட்- அபிஷேக் சர்மா களமிறங்கினர். ராஜஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அபிஷேக் 12 ரன்னிலும் அன்மோல்பிரீத் சிங் 5 ரன்னிலும் வெளியேறினர்.

இதனையடுத்து டிராவிஸ் ஹெட் மற்றும் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தினர். மெதுவாக விளையாடிய ஹெட் 44 பந்தில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கிளாசன் அவர் பங்குக்கு அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் அதிரடி காட்டிய நிதிஷ் அரை சதம் விளாசி அசத்தினார்.

இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

நிதிஷ் ரெட்டி 76 ரன்னிலும் கிளாசன் 42 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி