செய்தி விளையாட்டு

IPL Match 30 – 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி

ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் அடித்துள்ளது. சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் பதிரனா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வீரர்கள் ஷேக் ரஷீத் 27 ரன்களும், ரவீந்திரா 37 ரன்களும், திரிபாதி 9 ரன்களும், ஜடேஜா 7 ரன்களும், விஜய் சங்கர் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த துபே மற்றும் தோனி சிறப்பாக ஆடினர்.

துபே 37 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 43 ரன்களும், தோனி 11 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 26 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர்.

இறுதியில் சிஎஸ்கே அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி