இலங்கை செய்தி

நாடாளுமன்றத்தில் டெண்டர் மாஃபியா தொடர்பில் வெளியான தகவல்

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் அதிகாரியொருவரினால் மேற்கொள்ளப்பட்ட டெண்டர் மாஃபியா தொடர்பான விடயங்கள் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, சம்பந்தப்பட்ட அதிகாரி தனக்கு நட்பான நிறுவனங்களுக்கு மட்டுமே டெண்டர் கொடுப்பதாக கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பதிலளித்துள்ளார்.

அதற்கு சற்று முன்னர் குறித்த அதிகாரி திறமையான அதிகாரி என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோரின் கருத்துக்களில் முரண்பாடு காணப்படுவதால், சரியான தகவல்களை வழங்க வேண்டுமென சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை