ஆசியா

ஓரினச் சேர்க்கை விருந்து நிகழ்வில் திரண்ட ஆண்கள் 56 பேரை கைது செய்த இந்தோனீசிய பொலிஸார்

ஓரினச் சேர்க்கை விருந்து நிகழ்வில் திரண்ட 56 ஆண்களை இந்தோனீசியக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள சௌத் ஜகார்த்தா ஹோட்டலில் கடந்த சனிக்கிழமையன்று (பிப்ரவரி 1) அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறைப் பேச்சாளர் ஏட் ஏரி சயம் இந்திராடி திங்கட்கிழமையன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நிகழ்விடத்திலிருந்து ஆணுறைகளும் எச்ஐவி தொற்றுத் தடுப்பு மருந்துகளும் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கைதுசெய்யப்பட்டோரில் மூவர்மீது அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்கள்மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் 15 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

ஜகார்த்தா உட்பட இந்தோனீசியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானதன்று. அதே நேரத்தில், முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட அந்நாட்டில் அச்செய்கை சமூகக் கட்டுக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு பியூ ஆய்வு நிலையம் நடத்திய கருத்தாய்வில் பங்கேற்ற இந்தோனீசியர்களில் 80 சதவீதமானோர் ‘ஓரினச் சேர்க்கையை சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடாது’ என நம்புவதாகத் தெரிவித்திருந்தனர்.

 

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்