செய்தி விளையாட்டு

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு தொடரை கைப்பற்றிய இந்தியா

இலங்கையில் நடைபெற்ற மகளிர் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கொழும்பில் ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் தொடரை வென்றது.

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்தது.

இந்திய இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா சதம் அடித்து விளாசினார்.

343 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கை அணி, இந்திய பந்து வீச்சாளர்களின் தாக்குதலைத் சமாளிக்க முடியாமல் திணறியது.

அந்த அணியில் கேப்டன் சாமரி அதபத்லு (51 ரன்கள்) மற்றும் நிலக்ஷிகா சில்வா (48 ரன்கள்) மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் ஸ்கோர் செய்தனர். இறுதியில் இலங்கை அணி 48.2 ஓவர்களில் 245 ரங்களில் சுருண்டது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி