இலங்கை

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

  • October 11, 2025
  • 0 Comments

39 கிராம் ஹெரோயின் தம்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர் தொட்டலக கண்ணாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. எலகந்த பகுதியில் 39.99 கிராம் ஹெரோயின் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், கணபதி கணேஷ் எனப்படும் தொட்டலக கண்ணா மீது 2014 டிசம்பர் 26 ஆம் திகதி சட்ட மா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். பிணையில் விடுவிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது தலைமறைவாக இருந்ததால், அவர் ஆஜராகாமலேயே […]

உலகம்

மெக்சிகோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி, மேலும் பலர் மாயம்

  • October 11, 2025
  • 0 Comments

மத்திய மற்றும் கிழக்கு மெக்சிகோ முழுவதும் பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை(10) தெரிவித்துள்ளனர். கிழக்கு மெக்சிகோவின் ஹிடால்கோ மாநிலத்தில் மிகப்பெரிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, அங்கு 16 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 1,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. மத்திய மெக்சிகோவின் பியூப்லா மாநிலத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11 பேர் காணாமல் போயுள்ளனர், அதே நேரத்தில் வெராக்ரூஸில் இரண்டு பேர் மற்றும் […]

இலங்கை

இலங்கை – கல்வி மறுசீரமைப்பில் சட்டக் கல்வியை உள்வாங்க நடவடிக்கை!

  • October 11, 2025
  • 0 Comments

இலங்கையில் மேற்கொள்ளப்படும் புதிய கல்வி மறுசீரமைப்பில் சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் அடிப்படை சட்டத்தை தெரிவு பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்றைய (10.10) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “புதிய கல்வி மறுசீரமைப்பை நாங்கள் ஏற்கிறோம். புதிய தொழிற்றுறை மற்றும் உலகுக்கு பொருந்தும் வகையில் கல்வி திட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும். பாடத்திட்டத்தில் சட்டத்தை கட்டாய […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்; மூவர் பலி

  • October 11, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஷெல்ஹார்பர் விமான நிலையத்தில் இருந்து ஒரு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையில் தரையில் மோதியதால் தீப்பிடித்து எரிந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப்படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இலங்கை

கண்டி- காணாமல் போன மாணவன் மகாவலி ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு

  • October 11, 2025
  • 0 Comments

கண்டி – தென்னேகும்புர பாலம் அருகே காணாமல் போன இரண்டு மாணவர்களில் ஒருவரின் சடலம் மகாவலி ஆற்றில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட மாணவர் 14 வயதுடைய ஜெகதீஸ் என தெரியவந்துள்ளது. நேற்று (09) இரு பாடசாலை மாணவர்கள் காணாமல் போனதாக காவல்துறைக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டது. கண்டி நகரில் இரு பாடசாலைகளில் கல்வி கற்று வந்த ஜெகதீஷ் மற்றும் எம்.மிலான் ஆகியோர் நேற்று மாலை வளர்ப்பு மீன்களை கொள்வனவு செய்வதாக கூறி வீடுகளில் இருந்து திகன […]

ஆசியா

பாகிஸ்தானில் காவல்துறை பயற்சி மையத்தின் மீது தாக்குதல் – 13 பேர் பலி!

  • October 11, 2025
  • 0 Comments

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள காவல்துறை பயற்சி மையத்தின் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில்  07 காவல்துறை அதிகாரிகளும் 06 போராளிகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் சமீபகாலமாக பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. போராளிகள் மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளின் இருப்பிடமாக பாகிஸ்தான் அமைந்திருப்பதாகவும் பல நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். காவல்துறையினரின் அறிக்கையின்படி , தாக்குதல் நடத்தியவர்கள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த தாக்குதலைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கொல்லப்பட்ட அதிகாரிகளின் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானிய கடவுச்சீட்டில் ஏற்படப்போகும் புதிய மாற்றம்

  • October 11, 2025
  • 0 Comments

பிரித்தானிய கடவுச்சீட்டில் புதிய மாற்றம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் புதிய கடவுச்சீட்டுகளின் முன்பக்கத்தில் மன்னர் சார்லஸின் சின்னமே இடம்பெறும் என உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டின் பக்கங்களில் “அவரது மாட்சிமை” என்ற வாசகமும் இடம்பெறும். எனினும் தற்போதைய கடவுச்சீட்டின் அட்டைப்படத்தில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சின்னமே உள்ளது. புதிய கடவுச்சீட்டுகளில் பிரித்தானியாவில் நான்கு பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், பென் நெவிஸ் (Ben Nevis), லேக் டிஸ்ட்ரிக்ட் (Lake District), த்ரீ […]

உலகம்

நவம்பர் மாதம் முதல் சீனா மீது 100 சதவீத வரி விதிப்பதாக அறிவித்துள்ள ட்ரம்ப்

  • October 11, 2025
  • 0 Comments

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர் மீண்டும் தொடங்கியுள்ளது. அரிய வகை கனிம வளங்களைச் சீனா ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்த சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (10) அறிவித்துள்ளார். இந்த கூடுதல் வரி விதிப்பு நவம்பர் 1ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே 30 […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியாவில் தமிழர்கள் செரிந்து வாழும் பகுதியில் வெளிநாட்டவர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • October 11, 2025
  • 0 Comments

தமிழர்கள் செறிந்து வாழும் மேற்கு லண்டனில் அமைந்துள்ள ஹில்லிங்டன் பகுதியில் வெளிநாட்டவர்கள் வருகையால் கடும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. சமூக வசதிகள், வேலைவாய்ப்பு மற்றும் பாடசாலை ஆகியவை காரணமாக இந்தப் பகுதி தமிழர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் சாகோஸ் தீவுவாசிகளின் பெருமளவு வருகையால் ஹில்லிங்டன் நகர சபை கடும் நிதி அழுத்தத்திற்கு முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. குடியுரிமையை பெறும் நோக்கில், 2022ஆம் ஆண்டிலிருந்து சாகோஸ் தீவுவாசிகள் பிரித்தானியாவுக்கு வர தொடங்கினர். இந்த […]

இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலையில் மீண்டும் அதிகரிப்பு

  • October 11, 2025
  • 0 Comments

நாட்டில் தங்கத்தின் விலை 5,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று காலை கொழும்பு ஹெட்டி தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் 22 காரட் தங்கத்தின் விலை 310,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று 305,300 என விலை நிர்ணயிக்கப்பட்டது. இதற்கிடையில், நேற்று 330,000 ரூபாயாக இருந்த 24 காரட் தங்கத்தின் விலை இன்று 335,000 ரூபாயாக உயர்ந்துள்ளதாக கொழும்பு ஹெட்டி தெரு தங்க சந்தை […]

error: Content is protected !!