இலங்கை செய்தி

பெண்கள் குறித்து உலகத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சீனா புறப்பட்ட இலங்கை பிரதமர்

  • October 11, 2025
  • 0 Comments

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், 2025ம் ஆண்டுக்கான பெண்கள் தொடர்பான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரியா சீனா புறப்படுகிறார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. “ஒரு பகிரப்பட்ட எதிர்காலம்: பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை” என்ற கருப்பொருளின் கீழ் பெய்ஜிங்கில் நடைபெறும் 2025ம் ஆண்டுக்கான உலகளாவிய தலைவர்கள் கூட்டம், சீன அரசாங்கத்தாலும் ஐ.நா பெண்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது, ​​பிரதமர் ஹரிணி ஒரு முக்கிய […]

ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் சட்டவிரோத கிடங்கில் 250 உயிரிழந்த விலங்குகள் கண்டுபிடிப்பு

  • October 11, 2025
  • 0 Comments

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து ஸ்பெயினில் ஒரு அசுத்தமான கிடங்கில் 250 இறந்த விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் குறித்து தள மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேற்கு கிராமமான மெசன் டோ வென்டோவில் உள்ள சட்டவிரோத இடத்தில் விலங்குகள் சித்ரவதை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 28 சிவாவாக்கள் (chihuahuas) மற்றும் பறவைகள் உட்பட இறந்த விலங்குகளின் சிதைவுகள் வெவ்வேறு நிலைகளில் இருந்தன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், உயிருக்கு ஆபத்தான […]

உலகம் செய்தி

புரோஸ்டேட் (Prostate) புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை பெற்று வரும் ஜோ பைடன்

  • October 11, 2025
  • 0 Comments

புரோஸ்டேட் புற்றுநோய் காரணமாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கதிர்வீச்சு மற்றும் ஹார்மோன் சிகிச்சையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கதிர்வீச்சு சிகிச்சை ஐந்து வாரங்கள் நீடிக்கும் என்று அவரது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். மே மாதம் ஜனாதிபதி அலுவலகம், பைடனுக்கு எலும்புகளுக்கு பரவும் ஒரு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அறிவித்தது. புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோயாகும். இது குறிப்பாக வயதானவர்களுக்கு பொதுவானது. 80 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் […]

இந்தியா செய்தி

புனேவிலிருந்து வந்த ஆகாசா ஏர் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு

  • October 11, 2025
  • 0 Comments

புனேவிலிருந்து புறப்பட்ட ஆகாசா (Akasa) ஏர் விமானம் மீது பறவை மோதியதில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. “புனேவிலிருந்து 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் டெல்லிக்குச் சென்ற அகாசா ஏர் விமானம் QP 1607 மீது பறவை மோதியது. விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது, அனைத்து பயணிகளும் பணியாளர்களும் வெளியேற்றப்பட்டனர்,” என்று விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், விமானம் பொறியியல் குழுவால் பரிசோதிக்கப்பட்டு வருகிறது என்றும் முழுமையான ஆய்வுக்குப் பிறகு […]

பொழுதுபோக்கு

பிக் பாஸ் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்

  • October 11, 2025
  • 0 Comments

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் தமிழ் 9வது சீசன் பிரம்மாண்டத்தின்  5ம் திகதி தொடங்கப்பட்டது. இதற்கு முன் வந்த சீசன்களை விட  இந்த சீசன் ஆரம்பமே அதிரடியாக உள்ளது. இந்த வாரம்  பிக் பாஸ் வீட்டைவிட்டு ஒருவர் வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது. அது யார் என்று பார்ப்போம். பிக்பாஸ் வந்த 5வது நாளிலேயே தனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை எனக்கூறி ஆர்.ஜே.நந்தினி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். யாரிடம் கோபத்தை காட்டுவது என தெரியாமல் வீட்டில் உள்ள அனைத்து […]

உலகம் செய்தி

அமெரிக்காவின் மிசிசிப்பியில் உள்ள பாடசாலை வளாகத்தில் 4 பேர் சுட்டுக்கொலை

  • October 11, 2025
  • 0 Comments

மிசிசிப்பியின் டவுன்டவுன் லேலண்டில் உள்ள ஒரு பாடசாலை வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 12 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு தொடர்பாக டைலர் ஜரோட் குட்லோ என அடையாளம் காணப்பட்ட 18 வயது இளைஞரை தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இளைஞர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல் துறை தலைவர் அல்லது ஷெரிப் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு லேலண்ட் மேயர் ஜான் லீ வலியுறுத்தியுள்ளார். மேலும், காயமடைந்தவர்களில் நான்கு பேர் விமானம் […]

செய்தி விளையாட்டு

INDvsWI Test – இரண்டாம் நாள் முடிவில் 140 ஓட்டங்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணி

  • October 11, 2025
  • 0 Comments

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. நாணய சுழற்சியை வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 318 ஓட்டங்கள் பெற்றிருந்தது. ஜெய்ஸ்வால் 173 […]

பொழுதுபோக்கு

பிக் பாஸில் இன்று நடக்கப்போவது என்ன?

  • October 11, 2025
  • 0 Comments

பிக் பாஸ் ஆரம்பமானாலே வார இறுதி நாளான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையில் தான் ரசிகர்கள் அதிக ஆவலுடன் காத்திருப்பார்கள். அந்தவகையில் இன்று வெளியான மூன்று ப்ரோமோக்களும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் ப்ரோமோவில், பிக் பாஸ் சீசன் 9 தொகுப்பாளராக உள்ள விஜய் சேதுபதி, போட்டியாளர்களின் பெயர்களை கேட்டு உரையாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் ஆதிரை மட்டும் உட்கார்ந்தபடியே தனது பெயரை கூறுவது போலவும், அதற்கு விஜய் சேதுபதி, “ஏன் ஆதிரையால் எழுந்து நிற்க முடியவில்லையா? மற்ற நான்கு பேரும் […]

உலகம்

சூடானில் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 60 பேர் பலி

  • October 11, 2025
  • 0 Comments

இன்று(11) மேற்கு சூடானின் எல் ஃபாஷர் நகரில் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலையில் RSF டார் அல்-அர்காம் தங்குமிடம் மற்றும் ஓம்துர்மான் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் மீது திட்டமிட்ட ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகவும், குழந்தைகள், பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், டஜன் கணக்கானோர் காயமடைந்ததாகவும் மருத்துவ வட்டாரம் தெரிவித்தது. இறந்தவர்களின் உடல்கள் எல் ஃபாஷரில் உள்ள சவுதி […]

இலங்கை

களுத்துறையில் பதிவாகியுள்ள துப்பாக்கிச்சூடு சம்பவம்

  • October 11, 2025
  • 0 Comments

களுத்துறை தெற்கு, பலாதோட்ட பகுதியில் அமைந்துள்ள மோட்டார் சைக்கிள் சேவை நிலையம் (Service Centre) ஒன்றின் மீது இன்று (11) மாலை 6 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்திற்காக 9mm ரக கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட மோட்டார் […]

error: Content is protected !!