இலங்கை

இலங்கையில் அதிகரிக்கப்படும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம்!

  • October 14, 2025
  • 0 Comments

இலங்கையில் பொதுத்துறை ஊழியர்களின் சம்பள உயர்விற்கு ஏற்ப தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளமைக்கு அமைவாக இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 2025-04-01 முதல் மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமானது  17,500 ரூபாவில் இருந்து  27,000 ரூபாவாகவும்,  2026-01-01 முதல் மாதாந்திர குறைந்தபட்ச ஊதியம்  30,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும். மாதாந்திர குறைந்தபட்ச ஊதிய உயர்வு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி, முதலாளிகளின் அறக்கட்டளை நிதி, கூடுதல் […]

உலகம்

4 பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்த ஹமாஸ்

  • October 14, 2025
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பிடம் இருந்து நான்கு பணயக்கைதிகளின் உடல்களைப் பெற்றுக்கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) உறுதிப்படுத்தியுள்ளன. இந்த உடல்களை ஒப்படைக்கும் பணி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் (ICRC) எளிதாக்கப்பட்டது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பணயக்கைதிகள் தொடர்பான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் அமைப்பானது உயிரிழந்த 24 பணயக்கைதிகளின் உடல்களையும் இஸ்ரேலிடம் ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சியுள்ள உடல்களை ஒப்படைக்கும் நடைமுறைகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா

டெல்லியில்(Delhi) 20 வயது பெண் ஒருவர் காதலனால் கத்தியால் குத்திக் கொலை

  • October 14, 2025
  • 0 Comments

வடகிழக்கு டெல்லியின் நந்த் நக்ரி(Nand Nagri) பகுதியில், 20 வயதுடைய பெண் ஒருவர், அவரது காதலனால் இன்று காலை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நந்த் நக்ரியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது. குறித்த பெண் வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகம் கொண்டதால் காதலன் அந்தப் பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.சண்டையின் முடிவில் அவர் கத்தியால் பலமுறை தாக்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த அந்தப் […]

உலகம்

மடகஸ்காரில் (Madagascar) நிலவும் பதற்றம் – விமான சேவைகளை நிறுத்தும் ஏர் பிரான்ஸ்!

  • October 14, 2025
  • 0 Comments

மடகஸ்காரில் (Madagascar) நிலவி வரும் அரசியல் குழப்பங்கள் காரணமாக அந்நாட்டிற்கான விமான சேவைகளை நிறுத்துவதாக ஏர் பிரான்ஸ் (Air France) அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமை வரை விமானங்கள் நிறுத்தப்படும் என AFP செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. விமான செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவது கள நிலைமையின் தினசரி மதிப்பீட்டிற்கு உட்பட்டது எனவும் ஏர் பிரான்ஸ் (Air France) அறிவித்துள்ளது. தண்ணீர், மின் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து அந்நாட்டில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு […]

பொழுதுபோக்கு

கவர்ச்சிப் புயல் மலைக்கா அரோராவுக்கு இணையாக ஆடிய ரஷ்மிகா

  • October 14, 2025
  • 0 Comments

நடிகர்கள் ஆயுஷ்மான் குர்ரானா, ரஷ்மிகா மந்தனா, நவாஸுதின் சித்திக் நடிப்பில் தம்மா என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் 21 ஆம் திகதி வெளியாகியுள்ளதால் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தம்மாவில் இடம்பெற்ற பாய்சன் பேபி என்கிற பாடலுக்கு ரஷ்மிகா மந்தனா, மலைக்கா அரோரா இருவரும் இணைந்து கவர்ச்சியாக ஆடியுள்ளனர். இது தற்போது செம்ம வைரலாகி வருகின்றது. இப்பாடலில் பாலிவூட்டில் கவர்ச்சிக்குப்பேர் போன மலைக்கா அரோராவுடன் நம்ம நேஷனல் கிரஷ் ரஷ்மிகா ஈடு கொடுத்து […]

பொழுதுபோக்கு

zee தமிழ் அதிரடியாக எடுத்துள்ள முடிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • October 14, 2025
  • 0 Comments

சின்னத்திரை சீரியல்கள் என்றால் சன்டிவி தான் என்ற காலம் போய் தற்போது விஜய் டிவி மற்றும் zee தமிழ் சீரியல்கள் போட்டிபோட்டுக்கொண்டு இருக்கின்றன. டாப் 10 டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவிக்கு நிகராக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள் இடம்பிடிக்கின்றன. இந்த நிலையில், zee தமிழ் தொலைக்காட்சியில் குறைவான டிஆர்பி ரேட்டிங்கை பெற்று வந்த மூன்று சீரியல்களை  விரையில் முடித்துவிட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அந்த மூன்று சீரியல்களின் கிளைமாக்ஸ் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் சைபர் தாக்குதல்கள் – முக்கிய நிறுவனங்களுக்கு பாதிப்பு!

  • October 14, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் ஒன்லைன் (online) மூலம் இடம்பெறும் மோசடிகள் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சீனா மற்றும் ரஷ்யாவில் உள்ள ஹேக்கர்கள் இந்த மோசடிகளை மேற்கொள்ளவதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பிரித்தானியாவின் முக்கிய நிறுவனங்களாக மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் (Marks and Spencer), கோ-ஆப் (Co-op) மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) ஆகிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம் […]

பொழுதுபோக்கு

செம்மணி அவலத்தை வார்த்தைகளால் தெறிக்க விட்ட கிளிநொச்சி Rap பாடகர்…

  • October 14, 2025
  • 0 Comments

அண்மைக்காலங்களில் இலங்கை கலைஞர்கள் உலகளவில் சாதனைகளை படைத்து வருகின்றார்கள். எனினும் எத்தனையோ இளைஞர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு சரியான இடம் இல்லாமல் போராடி வருகின்றார்கள். ஆனால் இன்று உலகளவில் புகழ்பெற்ற ரப் பாடகர்கள் வரிசையில் ஈழத்து இளைஞர்களும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். அந்த வகையில், கிளிநொச்சி மண்ணில் பிறந்த ராப் கலைஞர் sagee, தனது வார்த்தைகளால் ஈழம், மாவீரர், செம்மணி புதைக்குழி தொடர்பான உணர்ச்சிப் பூர்வமான செய்திகளை, தனது ராப் பாடல்கள் டூலம் வெளிப்படுத்தி இளைஞர்கள் மத்தியில் […]

இலங்கை

இலங்கையில் மின்கட்டண உயர்வு தொடர்பில் வெளியான தகவல்!

  • October 14, 2025
  • 0 Comments

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் (PUCSL) இந்த காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களைத் திருத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட  PUCSL இன் தலைவர் பேராசிரியர் கே. பி. எல். சந்திரலால் தொடர்புடைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் மின்சாரக் கணக்கீட்டு முறைகள் குறித்த மறுஆய்வுக்குப் பிறகு, அடுத்த மூன்று மாதங்களுக்கு கட்டணங்களை அதிகரிக்க வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு செலவுகள் […]

உலகம்

மலேசியாவில் குழந்தைகள் மத்தியில் பரவும் நோய் – 6000 பாடசாலைகள் மூடல்!

  • October 14, 2025
  • 0 Comments

மலேசியாவில் வேகமாக பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா (influenza) தொற்றுநோய் காரணமாக   6000 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோயைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  மேலும் கடந்த வாரத்தில் 97 இன்ஃப்ளூயன்ஸா (influenza) தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலேசியாவின் பல பகுதிகளிலிருந்தும் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர்  பாடசாலை மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஃப்ளூயன்ஸா (influenza)  காய்ச்சல் என்பது ஒரு வைரஸ் தொற்று ஆகும், இது காய்ச்சல் மற்றும் குளிர், தும்மல், இருமல் மற்றும் தொண்டை […]

error: Content is protected !!