செய்தி விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்த தென்னாப்பிரிக்காவின் இந்திய வம்சாவளி வீரர்

  • October 14, 2025
  • 0 Comments

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 378 ஓட்டங்கள் சேர்த்து சகல விக்கெட்களையும் இழந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் தமிழ்நாடு வம்சாவளியை சேர்ந்த செனுரன் முத்துசாமி (Senuran Muthusamy) 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 269 ஓட்டங்களுக்கு […]

பொழுதுபோக்கு

விசில் அடித்த ரசிகரிடம் கோபமடைந்த அஜித்

  • October 14, 2025
  • 0 Comments

அஜித் ஐரோப்பாவில் நடைபெற்று வரும் கார் பந்தயங்களிலும் கலந்துகொண்டு வருகிறார். மேலும், நரேன் கார்த்திகேயனுடன் மலேசியாவில் நடைபெறும் பந்தயத்திலும் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த நிலையில், ரேஸ் பயிற்சியின்போது ரசிகர் ஒருவர் அஜித்தைப் பார்த்து உற்சாகமாகக் குரல் கொடுத்தார். அஜித்தும் சிரித்தபடி கையசைத்ததும், அந்த ரசிகர் விசிலடித்தார். அதனைக் கவனித்த அஜித், விசிலடிக்க வேண்டாம் என சைகை மூலம் கண்டித்து, முறைத்துப் பார்த்தபடி சென்றுவிட்டார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகம் செய்தி

பங்களாதேஷ் தீ விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்வு

  • October 14, 2025
  • 0 Comments

பங்களாதேஷ் (Bangladesh) தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு ஆடை தொழிற்சாலை மற்றும் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. ஆரம்பத்தில் 09 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ப்ளீச்சிங் பவுடர் (bleaching powder), பிளாஸ்டிக் (plastic) மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு (hydrogen peroxide) உள்ளிட்ட ஆபத்தான பொருட்களை சேமித்து வைத்திருந்த ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த […]

உலகம்

மடகஸ்காரின்(Madagascar) ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்

  • October 14, 2025
  • 0 Comments

இன்று(14) மடகாஸ்கரில்(Madagascar) அரசு அதிகாரம், இராணுவ ஜெண்டர்மேரி(gendarmerie) மற்றும் தேசிய காவல்துறை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இராணுவ கவுன்சிலால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக மலகாசி(Malagasy) இராணுவ அதிகாரி கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா(Michael Randrianirina) அறிவித்தார். மலகாசி மக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காக அரசியலமைப்பு இடைநிறுத்தப்பட்டு புதிய தேசிய கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாக ராண்ட்ரியானிரினா கூறினார். செனட், உயர் அரசியலமைப்பு நீதிமன்றம் மற்றும் தேசிய சுதந்திர தேர்தல் ஆணையம் உள்ளிட்ட முக்கிய பொது நிறுவனங்களைக் கலைப்பதாகவும் அவர் அறிவித்தார். மடகாஸ்கர் நாட்டில் நிலவும் […]

இலங்கை

புதிய உச்சம் தொட்ட கொழும்பு பங்குச் சந்தை : 08 டிரில்லியனை தாண்டிய மூலதனம்!

  • October 14, 2025
  • 0 Comments

இலங்கை மூலதனச் சந்தை வரலாற்றில் ஒரு தனித்துவமான மைல்கல் இன்று பதிவாகியுள்ளது. இதன்படி கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த சந்தை மூலதனம்   8 டிரில்லியன் என்ற அளவைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இதே நேரத்தில், அனைத்து பங்கு விலைக் குறியீடு (ASPI) இன்றைய வர்த்தகத்தின் முடிவில் 22,372.57 புள்ளிகளில் நிறைவடைந்தது.  இது முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 51.49 புள்ளிகள் அதிகமாகும். S&P SL20 குறியீடும் பகலில் 22.07 புள்ளிகள் அதிகரித்து இந்த ஆண்டின் அதிகபட்ச அளவான 6,229.44 புள்ளிகளை […]

உலகம்

நோர்வேயில் உள்ள தூதரகத்தை மூடவுள்ள வெனிசுலா(Venezuela)

  • October 14, 2025
  • 0 Comments

எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு(María Corina Machado) அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, திங்களன்று(13) ஆஸ்லோவில்(Oslo) உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா(Venezuela) அறிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடிய, வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு (María Corina Machado)அறிவிக்கப்பட்டது. வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். நோர்வே அரசின் தன்னாட்சி […]

இலங்கை

இலங்கையில் இருந்து வேலைக்காக தென்கொரியாவிற்கு படையெடுக்கும் இளைஞர்கள்!

  • October 14, 2025
  • 0 Comments

இந்த ஆண்டு 2,927 இலங்கையர்கள் கொரியாவிற்கு வேலைக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இன்று அறிவித்துள்ளது. இந்தக் குழுவில் 100 இளம் பெண்கள் அடங்குவதாக பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, உற்பத்தித் துறையில் 2,197 இலங்கையர்களும், மீன்பிடித் துறையில் 680 பேரும், கட்டுமானத் துறையில் 23 பேரும், விவசாயத் துறையில் இரண்டு பேரும் வேலைவாய்ப்பிற்காக அங்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இம்மாத இறுதிக்குள் மேலும் 200 இலங்கையர்களை வேலைவாய்ப்பு நிமித்தம் தென்கொரியாவிற்கு அனுப்ப பணியகம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. […]

பொழுதுபோக்கு

“உடலுறவு காட்சி மட்டும் தான் இல்லை” பிக் பாஸை கிழித்து தொங்கவிட்ட தலைவர்

  • October 14, 2025
  • 0 Comments

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 5 ஆம் திகதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி, தமிழர் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இதனிடையே, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். […]

உலகம்

பங்களாதேஷில் (Bangladesh) ஆடைத் தொழிற்சாலையில் தீவிபத்து – 09 பேர் பலி!

  • October 14, 2025
  • 0 Comments

பங்களாதேஷ் (Bangladesh) தலைநகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலை மற்றும் இராசாயனக் கிடங்கில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டாக்காவின் மிர்பூர் ( Dhakas Mirpur) பகுதியில் உள்ள ஏழு மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மீட்புப் பணியாளர்கள் குறைந்தது ஒன்பது உடல்களை மீட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு அதிகாரி தல்ஹா பின் ஜாஷிம் (Talha bin Jashim) தெரிவித்துள்ளார். உயிரிழப்புகளின் எண்ணிக்கை  அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆடைத் […]

உலகம்

இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்குப் பின்பு காசாவில் ஆயுதக் குழுக்களுக்கு இடையே மோதல்; 27 பேர் பலி

  • October 14, 2025
  • 0 Comments

காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் அங்கு ஹமாஸ் அமைப்புக்கும் ஆயுதமேந்திய மற்றொரு குழுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு காசா நகரில் உள்ள டெல் அல்-ஹவா(Tell al-Hawa) பகுதியில் 300-க்கும் மேற்பட்ட ஹமாஸ் வீரர்கள் டக்முஷ் என்ற ஆயுதக் குழுவினர் பதுங்கியிருந்த குடியிருப்பு வளாகத்தைச் சுற்றி வளைத்துத் தாக்க முயன்றபோது மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சண்டையில் 8 ஹமாஸ் போராளிகளும் […]

error: Content is protected !!